இம்முறை மொத்தமாக ஒரு கோடியே 71 இலட்சத்து 40 ஆயிரத்து 280 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள் ளனர். வருடாந்தம் சுமார் 2 இலட்சம் புதிய வாக்காளர்கள் இணைந்துகொள்ளப்படுவர்.
அந்தவகையில் 2019 ஆம் ஆண்டுக்குப் பின்னர் கிட்டத்தட்ட 10 இலட்சம் புதிய வாக்காளர்கள் வாக்காளர் இடாப்பில் இணைந்துள்ளனர்.
தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன்ஸ்ரீரத்நாயக்க இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் அடுத்த ஜனாதிபதியாகப் போகிறவர் யார் என்பதை தெரிவு செய்வதற்கான உரிமை மக்களுக்கு உண்டு. வாக்காளர்கள் சிந்தித்து தீர்மானம் எடுப்பது முக்கியமாகும் என் றும் அவர் குறிப்பிட்டார்.