இலங்கை - இந்தியா இடையே கடல்வழியே கேபிள்கள் மூலம் மின்சாரத்தை பகிரும் திட்டம் தொடர்பான பேச்சுகள் இறுதிக் கட் டத்தை எட்டியுள்ளன என்று அரச உயர்வட்டாரங்கள் தெரிவித்தன.
சென்னை அநுராதபுரம் இடையே செயல்படுத்தப்படவுள்ள இந்தத் திட்டம் தொடர்பாக கடந்த "நல்லாட்சி" அரசாங்கத்தின் காலத்தில்
பேச்சு ஆரம்பிக்கப்பட்டது. ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து கிடப்பில் போடப்பட்ட இந்தத் திட்டம் ரணில் விக்கிரம சிங்க ஜனாதிபதியாக
பதவியேற்ற பின்னர் மீண்டும் பேச்சுகள் ஆரம் பிக்கப்பட்டன. இந்தத் திட்டம் தொடர்பில் பல 15 இணக்கப்பாடுகள் எட்டப்பட்ட நிலையில் இந்தத் திட்டம் தொடர்பான பேச்சுகள் இறுதிக் கட் டத்தை எட்டியுள்ளன.
இந்தத் திட்டம் நடைமுறையாகும் போது, சென்னை - அநுராதபுரம் இடையே 200 ஜிகா வோட்ஸ் மின்சாரம் தேசிய கட்டமைப்பில் இணைக்கப்படும் என்று கூறப்படுகின்றது.