யாழ்ப்பாணத்தில் பிறந்து 45 நாட்களேயான பெண் குழந்தை ஒன்று உயிரிழந்தது. இறப்புக்கான காரணம் தெரியவில்லை
6 months ago

யாழ்ப்பாணத்தில் பிறந்து 45 நாட்களேயான பெண் குழந்தை ஒன்று நேற்று முன்தினம் உயிரிழந்தது.
கொடிகாமம் - தவசி குளத்தைச் சேர்ந்த துசியந்தன் டனுசியா என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந் தது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
கடந்த 16ஆம் திகதி குழந்தைக்கு சுகயீனம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பெற்றோர் குழந்தையை சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் சேர்ப்பித்தனர்.
மேலதிக சிகிச்சைக்காக நேற்று முன்தினம் குழந்தை யாழ். போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது. எனினும், குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசா ரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
குழந்தையின் இறப்புக்கான காரணம் கண்டு பிடிக்கப்படாத நிலையில் உடல்கூற்று மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
