ஏதிலி கோரிக்கையாளர்களின் அடிப்படை உரிமைகள் உறுதி செய்யப்பட வேண்டும் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவிப்பு
ஏதிலி கோரிக்கையாளர்களின் அடிப்படை உரிமைகள் உறுதி செய்யப்பட வேண்டும் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
கியூபிக் மாகாண முதல்வர் பிரான்கோயிஸ் லெகுலாட் ஏதிலி கோரிக்கையாளர் விவகாரம் தொடர்பில் கடும் விமர்சனங்களை வெளியிட்டுள்ளார்.
பிரான்சில் நடைபெற்று வரும் மாநாடு ஒன்றில் பிரதமர் ட்ரூடோ பங்கேற்றுள்ளார்.
இவ்வாறான பின்னணியில் முதல்வர் லெகுலேட்டின் கருத்துக்கு பிரதமர் பதிலளித்துள்ளார்.
ஆக்கபூர்வமான விடயங்களை மேற்கொள்வதற்கும் மக்களின் அடிப்படை உரிமைகளை உறுதி செய்வதற்கும் தாம் இங்கு கூடி இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
கியூபிக் மாகாண முதல்வரும் தற்பொழுது பிரான்சிக்கு விஜயம் செய்துள்ளார். மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும் என பிரதமர் ட்ரூடொ தெரிவித்துள்ளார்.
கியூபெக்கில் குடியேறியுள்ள ஏதிலிகளை பலவந்தமாக வெளியேற்ற வேண்டும் என மாகாண முதல்வர் கோரி வருகின்றார்.
எனினும் இந்த கோரிக்கையை பிரதமர் நிராகரித்துள்ளார்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
