யாழ்ப்பாண மாவட்டத்தில் வீசிய கடும் காற்று காரணமாக யாழ்ப்பாணம் பிரதேச செயலர் பிரிவில் உள்ள மூன்று வீடுகள் சேதம்.
7 months ago









யாழ்ப்பாண மாவட்டத்தில் வீசிய கடும் காற்று காரணமாக யாழ்ப்பாணம் பிரதேச செயலர் பிரிவில் உள்ள மூன்று வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த அனர்த்தத்தினால் மூன்று குடும்பங்களைச் சேர்ந்த பதினொரு அங்கத்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவில் புலோலி மேற்கு கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள நாகதம்பிரான் கோவில் மீது பனைமரம் முறிந்து விழுந்ததால் கோவிலும் முற்றாக சேதமடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
