
ஐஸ் என சந்தேகிக்கப்படும் போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வெலிக்கடை சிறைச்சாலை அதிகாரி ஒருவரின் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
வெலிக்கடை சிறைச்சாலையின் பிரதான நுழைவாயிலில் சிறைச்சாலை அவசர பதில் தந்திரோபாயப் படை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட சிறைச்சாலை அதிகாரியை பரிசோதித்த போது, அவரிடம் ஐஸ் என சந்தேகிக்கப்படும் சில போதைப்பொருள் பொதிகள் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அவற்றை அந்த அதிகாரி தனது பணி காலணியில் சூட்சுமமாக மறைத்து வைத்திருந்ததாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளரும் ஆணையாளருமான காமினி பி. திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ளவர் சுமார் 20 வருடங்கள் சிறைச்சாலையில் பணியாற்றிய அதிகாரி என தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொரளை பொலிஸ் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
