
கனடாவில் சில பேக்கரி உற்பத்திகள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுவீட் கிறீம் (Sweet Cream brand) பண்டக் குறியைக் கொண்ட பேக்கரி உற்பத்திகள் தொடர்பில் இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேற்படி பேக்கரி உற்பத்திகளில் சல்மொன்லா பக்றீரியா தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனடிய உணவு பரிசோதனை முகவர் நிறுவனம் இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வகை பேக்கரி உற்பத்திகளை நுகர வேண்டாம் என நுகர்வோருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், இந்த வகை உற்பத்திகளை சந்தையிலிருந்து மீளப் பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
பெரி டார்ட், இக்லெயர்ஸ், கேக் மற்றும் கனொல்லி போன்ற உணவுப் பண்டங்களில் பக்றிரீயா தாக்கம் ஏற்பட்டிருக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த உணவுப் பண்டங்களை உட்கொண்ட 17 பேர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
