மட்டக்களப்பு கடற்கரையில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு

6 months ago


மட்டக்களப்பு செட்டிபாளையம் கடற்கரையில் அடையாளம் தெரியாத பெண் ஒருவரின் சடலம் நேற்று திங்கட்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த கடற்கரையில் பெண் ஒருவரின் சடலம் கரை ஒதுங் கியுள்ளதாக பொதுமக்கள் பொலிஸாருக்கு தகவல் தெரியப்படுத்தியதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் உடலை மீட்டனர்.

ஆயினும் அது அடையாளம் காணப்படவில்லை எனவும் நீதிமன்ற அனுமதியை பெற்று உடலை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர

அண்மைய பதிவுகள்