2024 இல் 101 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 60 பேர் உயிரிழந்துள்ளனர் 44 பேர் காயம்.--பொலிஸ் தெரிவிப்பு

2 weeks ago



2024ஆம் ஆண்டு இதுவரை 101 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இதில் 60 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 44 பேர் காயமடைந்துள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவங்களில் பெரும்பாலானவை போதைப்பொருள் தகராறு காரணமாக நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களே என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.