ஊழல் வழக்கில் பிணையில் வெளிவந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீண்டும் கைது

1 month ago



ஊழல் வழக்கில் பிணையில் வெளிவந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான், போராட்ட வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டார்.

அவர் மீது ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதால், அவர் இப்போதைக்கு விடுதலையாக வாய்ப்பில்லை எனத் தெரிகிறது.

பாகிஸ்தான் தலைவர்களுக்கு வெளிநாட்டு தலைவர்கள் வழங்கும் பரிசுகள் எல்லாம் அரசு கருவூலத்துக்கு சென்று விடும். அவ்வாறு வழங்கப்படவில்லை.

உயர்ந்த ஆபரணம் ஒன்றை, இம்ரான்கான் பிரதமராக இருந்த போது அரசு கருவூலத்துக்கு குறைந்த பணம் செலுத்தி          முறைகேடான வழியில் எடுத்துக் கொண்டதாக ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் இம்ரான்கானுக்கு பிணை வழங்கியது.

பிணை கிடைத்து சில மணி நேரத்தில், தீவிரவாதம் மற்றும் இதர வழக்குகளில் இம்ரான் கானை ராவல்பிண்டி பொலிஸார் கைது செய்தனர்.