தாடி வளர்க்காத 281 படையினரை தலிபான் அரசு அதிரடியாக நீக்கியுள்ளது. இதேவேளை, ஒழுக்கநெறி தவறிய திரைப்பட இறுவெட்டுகளை விற்பனை செய்த ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தெற்காசிய நாடான ஆப் கானிஸ்தானில், 2021 ஆம் ஆண்டு முதல் தலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. இங்கு, பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், தலிபான் ஆட்சிக்காலத்தில் கடந்த ஓராண்டில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் பற்றி, அங்குள்ள அறநெறி அமைச்சகத்தின் திட்டமிடல் மற்றும் சட்டமாக்கல் பிரிவு இயக்குநர் மோஹிபுல்லா மோஹாலிஸ் கூறுகையில், இஸ்லாமிய சட்டத்துக்கு எதிராக செயல்பட்ட 13, 000 இற்கும் மேற்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, இஸ்லாமிய சட்டத்துக்கு உட்பட்டு தாடி வளர்க்காத 281 பேர் பாதுகாப் புப் படையில் இருந்து நீக்கப் பட்டுள்ளனர்- என்றார்.