வைத்தியர் அருச்சுனா காலையில் அம்பி போன்றும் மாலையில் அந்நியன் போன்றும் நடக்கின்றார்.-- வைத்தியர் பிறேமினி தெரிவிப்பு
வைத்தியர் அருச்சுனா காலையில் அம்பி போன்றும் மாலையில் அந்நியன் போன்றும் நடந்து கொள்கின்றார்.
அவரைப் பற்றி விளங்கி கொண்ட பலர் தற்போது அவரை புறக்கணிக்கின்றார்கள் என வைத்தியர் பிறேமினி தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் -
தமிழ் மக்கள் கூட்டணியின் பெண் வேட்பாளர் மிதிலைச் செல்வி, வைத்தியர் அருச்சுனாவிடம் துண்டு பிரசுரத்தை கையளித்த போது. அவர் அநாகரிகமான நடந்து கொண்டமையை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
வைத்தியருடன், அவரது சக வேட்பாளரான பெண் சட்டத்தரணி ஒரே மேசையில் இருந்து சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் போதே இந்த விடயம் நடைபெற்றது.
ஆனால் அவர் தான் ஒரு தனிப்பட்ட தொலைபேசி உரையாடலில் இருந்தமையால், அதனை அவதானிக்கவில்லை எனக் கூறியுள்ளார்.
அது முற்றிலும் பொய்யாகும்.
ஒரு பெண்ணாகவும், சட்டத்தரணியாகவும் பொறுப்பாக நடந்து கொள்ளவில்லை.
அது எங்களுக்கு மிகுந்த மனவருத்தத்தைத் தருகின்றது.
துண்டுப் பிரசுரத்தை பெண் வேட்பாளர் கையளித்த போது வாங்க விரும்பாவிடின் வாங்காது தவிர்த்து இருக்கலாம்.
அவரை அவ்வாறு அவமானப்படுத்தியிருக்கக் கூடாது.
வைத்தியர் அருச்சுனா காலையில் அம்பி போன்றும் மாலையில் அந்நியன் போன்றும் நடந்து கொள்கின்றார்.
அவரைப் பற்றி விளங்கிக் கொண்டோர் பலர் தற்போது அவரை புறக்கணிக்கின்றார்கள்.
தான் நாட்டுக்காக சிறை சென்றேன் என்கிறார். அவர் நாட்டுக்காக சிறை செல்லவில்லை. மற்றவர்கள் மீது அவதூறு பரப்பியமைக்கு.
அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரங்களை சமர்ப்பிக்காது.
நீதிமன்ற பிணை நிபந்தனைகளை மீறிய குற்றத்திற்காகவே சிறை சென்றார்.
அதேவேளை இவர் தொடர்ந்து வைத்தியர்களை அவமானப்படுத்தி வருகின்றார்.
அண்மையில் கூட வைத்தியர் த.சத்தியமூர்த்தியை தரக்குறைவாக பேசும் வீடியோ ஒன்றை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
இவ்வாறு அவர் தொடர்ந்து வைத்தியர்களை அவமானப்படுத்துவதனை ஏற்றுக்கொள்ள முடியாது. - எனத் தெரிவித்தார்.