மணற்கொள்ளைகளைத் தடுக்க சோதனைச் சாவடிகள் வேண்டும் பருத்தித்துறை, மருதங்கேணி பிரதேச செயலர்கள் கோரிக்கை.

மணற்கொள்ளைகளைத் தடுக்க சோதனைச் சாவடிகள் வேண்டும் பருத்தித்துறை, மருதங்கேணி பிரதேச செயலர்கள் கோரிக்கை.
யாழ்.பருத்தித்துறை மற்றும் மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவுகளில் சட்டவிரோத மணற்கடத்தல் நடவடிக்கைகள் சடுதியாக அதிகரித்துள்ளன.
எனவே சோதனைச் சாவடிகளை உடன் அமைத்து மணல் கடத்தலைத் தடுக்க வேண்டும் என இரு பிரதேச செயலகங்களினதும் பிரதேச செயலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற போதே அவர்கள் குறித்த கோரிக்கையை முன்வைத்தனர்.
தற்சமயம் குறித்த சோதனைச் சாவடிகள் அகற்றப்பட்டுள்ள நிலையிலேயே மீண்டும் மணல் அகழ்வுகள் சடுதியாக அதிகரித்துள்ளன.
இதனைக் கருத்திற் கொண்டு சோதனைச் சாவடிகளை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பருத்தித்துறை பிரதேச செயலாளர் மற்றும் மருதங்கேணி பிரதேச செயலாளர் கோரிக்கை விடுத்தனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
