இந்தியாவில். தன்னைக் கடத்தியவரை விட்டுப் பிரிய மனமில்லாமல் குழந்தை ஒன்று கதறி அழுத வீடியோ சமூக வலை தளங்களில் பரவி வருகின்றது.

4 months ago


தன்னைக் கடத்தியவரை விட்டுப் பிரிய மனமில்லாமல் குழந்தை ஒன்று கதறி அழுத வீடியோ சமூக வலை தளங்களில் பரவி வருகின்றது.

இந்தியா உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்தவர் தலைமைக் காவலர் தனுஜ் சாஹர். தற்போது காவல் துறையிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார், உத்தரப் பிரதேச மாநில காவல்துறையின் சிறப்புப் பிரிவு மற்றும் கண்காணிப்புப் பிரிவு ஆகியவற்றில் பணியாற்றியுள்ளார்.

இவர் கடந்த 14 மாதங்களுக்கு முன்பு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் வசித்து வரும் தனது உறவினர் ஒருவரின் 11 மாத ஆண் குழந்தை யைக் கடத்தியுள்ளார். இந்தக் கடத் தல் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய பொலி ஸார், தனுஜ் சாஹரை வலைவீசித் தேடி வந்தனர்.

அதேவேளை, தனுஜ் சாஹர் தனது தோற்றத்தை மாற்றி நீளமான தாடி மற்றும் தலைமுடியை வளர்த்துள்ளார். உத்தரப் பிரதேசத்தின் மதுரா மாவட்டத்தில் யமுனை நதிக்கரையில் குடிசை அமைத்து, துறவி போல் வேடமிட்டு வாழ்ந்து வந்துள்ளார். அவர் கடத்திச் சென்ற குழந்தையை தனது மகன் என்று கூறி வளர்த்து வந்துள்ளார்.

இதனிடையே தனுஜ் சாஹரின் இருப்பிடம் குறித்து பொலிஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து கடந்த 27ஆம் திகதி காவல்துறை சிறப்புப் படையினர் தனுஜ் சாஹர் தங்கியிருந்த இடத்திற்குச் சென்று அவரை மடக்கிப் பிடித்தனர். மேலும் அவரிடமிருந்து குழந்தையையும் மீட்டனர்.

இதையடுத்து, மீட்கப்பட்ட குழந்தை யின் பெற்றோர் ஜெய்ப்பூர் காவல் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டனர். அப்போது அந்தக் குழந்தை, தன்னைக் கடத்திச் சென்ற தனுஜ் சாஹரை விட்டுப் பிரிய மனமில்லாமல் கதறி அழுதது. தனுஜ் சாஹரும் குழந்தையைக் கட்டிப் பிடித்து அழத் தொடங்கினார்.

அவரிடமிருந்து குழந்தையை வலுக்கட்டாயமாகப் பிரித்து அதன் பெற்றோரிடம் ஒப்படைத்த பொலிஸார், தனுஜ் சாஹரைக் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

கைதுக்கு முன் நடந்த இந்தப் பாசப்போராட்டம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

அதனைப் பார்க்கும் பலர், தனுஜ் அந்தக் குழந்தையை நல்ல முறையில் வளர்த்துள்ளார் எனக் கருத்துப் பதிவிட்டு வருகின்றனர்.

அதேவேளை, 11 மாதக் குழந்தை யைக் கடத்தி, பெற்றோரிடமிருந்து குழந்தையை 14 மாதங்கள் பிரித்து வைத்திருந்த தனுஜ் சாஹருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் எனவும் பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அண்மைய பதிவுகள்