ஜப்பானில் இன்று 6.9 மற்றும் 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
5 months ago
ஜப்பானில் இன்று 6.9 மற்றும் 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜப்பானின் தெற்கு பிரதான தீவான கியூஷூவின் கிழக்கு கடற்கரையில் சுமார் 30 கிலோமீட்டர் ஆழத்தில் முதல் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், இரண்டாவது நிலநடுக்கம் மியாசாகிக்கு வடகிழக்கே 20 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், கியூஷு மற்றும் ஷிகோகு ஆகிய மேற்கு தீவுகளின் பசிபிக் கடற்கரையில் கடல் மட்டம் ஒரு மீட்டர் உயரும் அபாயம் இருப்பதாக ஜப்பான் அதிகாரிகள் தற்போது எச்சரிக்கை விடுத்துள்ளனர்.