முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களுடன் ஐக்கிய தேசிய கட்சி இரகசிய பேச்சு

6 months ago

முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களுடன் ஐக்கிய தேசிய கட்சி இரகசிய பேச்சு

ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் கட்சிகளின் ஆதரவை பெறும் முயற் சிகளில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஈடுபட்டு வருகிறார் என்று அறிய வருகிறது. இதற்காக, ஐக்கிய மக்கள் சக்தியுடன் தற்போது கூட்டணியில் உள்ள சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியவற்றுடனேயே இந்தப் பேச்சு நடைபெறுவதாகத் தெரிய வருகின் றது.

கடந்த 2015ஆம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்கவால் ஒருங்கிணைக்கப்பட்ட கூட்டணியில் இந்த இரண்டு கட்சிகளும் இருந்தன. 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலிலும் ஐ. தே.கவின் கூட்டணி யிலேயே இந்தக் கட்சிகள் இருந்தன.

எனினும், 2020ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் உருவாக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டணி யுடன் கைகோத்தன. தொடர்ந்து அந்தக் கூட்டணியிலேயே இந்தக் கட்சிகள் தொடர்ந்து வருகின்றன.

இந்தப் பின்புலத்தில் ரணில் விக்கிரமசிங்க தமது கூட்டணிக்குள் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸை கட்சிகளை சேர்த் தால் முஸ்லிம் மக்களின் கணிசமான வாக்குகளை தனக்கானதாக மாற்றலாம் என்று கருதுகிறார்.

இது தொடர்பில், ரிஷாத் பதியுதீன் மற்றும் ரவூப் ஹக்கீமுடன் இதுதொடர் பில் இரகசிய பேச்சுகள் நடைபெற்றுள்ளன. எனினும், அவர்கள் இதுவரை எவ்வித சாதகமான பதிலையும் அளிக்கவில்லை.

இதேசமயம், ரவூப் ஹக்கீம் ஐக்கிய மக்கள் சக்தியுடனான கூட்டணி தொடரும் என்று அண்மையில் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார். எனினும், ரிஷாத் பதியுதீன் ஜனாதிபதித் தேர்தல் குறித்து எந்தக் கருத்தும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

அண்மைய பதிவுகள்