வங்கியில் பல கோடி ரூபாய் மோசடி இலங்கையில் தங்கியுள்ள 13 வெளிநாட்டுப் பிரஜைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாக நீதிமன்றம் உத்தரவு
இணையவழி மூலம் மக்களின் வங்கிக் கணக்குகளில் பல கோடி ரூபாய் பணத்தை மோசடி செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் நாட்டில் தங்கியுள்ள 13 வெளிநாட்டுப் பிரஜைகளை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, ஒவ்வொரு மாதமும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அவர்களுக்குக் கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகு னாவெல உத்தரவிட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர்கள் மூன்று அநாமதேய நிறுவனங்களில் விஸா பெற்று இலங்கைக்கு வந்துள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
அவர்களில் 11 ஆண்களும் 2 பெண்களும் அடங்குவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக அவர்களைக் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்கு மூலங்களை வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
ஆனால், அந்த உத்தரவு நிறைவேற்றப்படாமையால், மீண்டும் உத்தரவிடுமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.