சீரழிந்துபோயுள்ள தமிழ்த் தேசிய அரசியல் பரப்பை ஒன்றிணைக்கும் வகையில் மக்கள் தீர்ப்பு அமைய வேண்டும் என்று பா.அரியநேத்திரன் தெரிவிப்பு.
சீரழிந்துபோயுள்ள தமிழ்த் தேசிய அரசியல் பரப்பை ஒன்றிணைக்கும் வகையில் மக்கள் தீர்ப்பு அமைய வேண்டும் என்று தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பின் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. இந்த நிகழ்வில் உரையாற்றியபோதே தமிழ்ப் பொது வேட்பாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் கூறுகையில், தமிழ்ப் பொதுவேட்பாளருக்கு தமிழ் மக்களிடையே பெரும் ஆதரவு பெருகிவருகிறது. இதைப் பார்த்து சிலர் பொறாமைப்படுகின்றனர் - சிலர் எரிச்சல்படுகின்றனர். சிலர் எச்ச ரிக்கை செய்கின்றனர். அவ்வாறான வர்களை சிரிப்போடு கடந்து செல் வோம். அவர்களின் பெயர்களைக்கூறி அவ்வாறானவர்களை பிரபலப்படுத்த நாங்கள் விரும்பவில்லை. தவறுகள் என்பது எல்லோரிடமும் இருக்கின்றன. தவறு இழைத்தவர்கள் அத்தனைபேரும் வருகின்ற 22 ஆம் திகதி தமிழ் மக்கள் அளிக்கும் முடிவைப் பார்த்து திருந்துவார்கள்.
சீரழிந்து போயிருக்கும் தமிழ்த் தேசிய அரசியல் பரப்பை ஒன்றிணைக்கும் வகையில் மக்கள் தீர்ப்பு அமைய வேண்டும். சில கட்சிகள் பொது வேட்பாளரை ஆதாரிக்காவிடில் அது செய்தி அல்ல. சங்கை ஆதரித்தால் அதுதான் செய்தி 21 ஆம் திகதிக்கு இடைபட்ட நாட்களில் பல்வேறு கதைகள் வரும் - வதந்திகள் வரும். மக்கள் அவை எதையும் பொருட் படுத்தாது சங்கு சின்னத்துக்கு வாக்களித்து தவறிழைப்பவ ர்களுக்கு தகுந்த பாடத்தை புகட்ட வேண்டும்.
எதிர்வரும் 21 ஆம் திகதி தமிழ் மக்கள் ஒன்றிணைந்து சங்கு சின்னத்துக்கு வாக்களித்து தமிழர் ஒற்றுமையை வெளிப்படுத்த வேண்டும் என்றார்.