யாழ்.மாவட்டத்தில் விவசாய உற்பத்திகளுக்கு நடைமுறையிலுள்ள கழிவு முகாமையால் விவசாயிகள் பெரும் நெருக்கடியைச் சந்திக்கின்றனர் என யாழ். மாவட்ட கமக்கார அமைப்பின் தலைவர்கள் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் சுட்டிக்காட்டினர்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
சீரற்ற காலநிலை மற்றும் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் விவசாயிகள் விவசாய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த இன்னல்களை எதிர்நோக்கி மேற்கொள்ளப்பட்ட விவசாய உற்பத்திகளை சந்தையில் விற்பனை செய்வதற்காக கொண்டு செல்லுகின்றபோது 10 கிலோகிராம் உற்பத்திக்கு 1 கிலோகிராம் கழிவு அறவிடப்படுகின்றது.
இது விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் செயற்பாடாகும்.
எனவே சந்தைகளை குத்தகைக்கு எடுக்கின்ற குத்தகையாளர்கள் தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும்.
அத்துடன் சம்பந்தப்பட்ட திணைக்களத்தின் ஊடாக வடமாகாண ஆளுநர் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.