வன்னி மாவட்ட எம்.பி ரவிகரனின் மக்கள் தொடர்பகம் புதுக்குடியிருப்பில் திறந்து வைப்பு

2 months ago



வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனின் மக்கள் தொடர்பகம் ஒன்று நேற்று முல்லைத்தீவு - புதுக்குடியிருப்புப் பகுதியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு நகருக்கு அருகாமையில், புதுக்குடியிருப்பு இரணைப்பாலை வீதியில் இது திறந்து வைக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் புதுக்குடியிருப்பின் மூத்த கல்விமான்களில் ஒருவரான ஓய்வு நிலை அதிபர் சிவசாமி செல்வநாயகத்தால் மங்கல விளக்கேற்றப்பட்டு நிகழ்வு ஆரம்பமானது.

அதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனால் மக்கள் தொடர்பகம் திறந்து வைக்கப்பட்டது.

உத்தியோகபூர்வமாக அலுவலகச் செயற்பாடுகளும் ஆரம்பித்து வைக்கப்பட்டன.                                  

தொடர்ந்து கலந்துரையாடல்களும்,    மக்கள் குறைகேள் சந்திப்புகளும் இடம்பெற்றன.

இவ்வாறு திறந்துவைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனின் புதுக்குடியிருப்பு மக்கள் தொடர்பகமானது வார நாள்களில் திங்கள், புதன், வெள்ளி ஆகிய தினங்களில் மக்களின் குறைகளைக் கேட்டறிவதற்காகத் திறந்து வைக்கப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.