கறுப்பு ஜுலை' (Black July) நீதிக்காக காத்திருப்பதாகவும் பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமாரன் தெரிவித்துள்ளார்.
கறுப்பு ஜுலை' (Black July) கலவரங்களை அடுத்து தமிழ் மக்கள் சர்வதேச நாடுகளுக்கு புலம்பெயர்ந்ததாகவும் அவர்கள் இன்னும் நீதிக்காக காத்திருப்பதாகவும் பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமாரன் (Uma Kumaran) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது 'X' தளத்தில் இட்ட பதிவிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
“1983ஆம் ஆண்டு ஜுலை மாதம் தமிழ் மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்ட 'கறுப்பு ஜுலை' கலவரங்கள் அரங்கேறி 41 வருடங்கள் கடந்திருக்கின்றன.
தமிழர்கள் மத்தியில் மிக மோசமான தாக்கத்தையும் தமிழர் வரலாற்றில் முக்கிய திருப்பங்களையும் ஏற்படுத்திய இக்கலவரங்கள் தொடர்பில் இன்னமும் நீதியோ பொறுப்புக்கூறலோ நிலைநாட்டப்படவில்லை
கறுப்பு ஜுலை கலவரங்களின் போது, இடம்பெற்ற கொடுமைகள் குறித்து எனது பெற்றோர் எனக்குக் கூறியுள்ளனர். இந்த கலவரங்களால் ஏற்பட்ட உளவியல் ரீதியான பாதிப்பு அடுத்தடுத்த தலைமுறைகளாகக் கடத்தப்படுவதோடு அவற்றை ஒருபோதும் மறக்கடிக்க முடியாது.
உயிரிழந்த அனைத்து உயிர்களையும் நினைவுகூருவதோடு இந்த விடயத்தில் நீதிக்கான எமது போராட்டம் தொடரும்” எனத் தெரிவித்துள்ளார்.