இலங்கை புதிய ஜனாதிபதி மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக் கூறல் அவசியம் என்பதை ஆதரிக்கவில்லை

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அநுரகுமார திஸாநாயக்கவும் போர்க் காலத்தில் இடம்பெற்ற பாரிய மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக் கூறப்படுதல் அவசியம் என்பதை ஆதரிக்கவில்லை என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தனது வருடாந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் மேலும் தெரிவித்துள்ளதாவது-
ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்துக்கு தேசிய மக்கள் சக்தியின் அநுரகுமார ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டவேளை இலங்கையின் அரசியல் பாதை மாறியது.
திஸாநாயக்க அதிகளவு சமத்துவமான பொருளாதார கொள்கைகளை முன்வைத்தார்,
ஊழலுக்கு எதிராக போராடுவது பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ஒழிப்பது உட்பட நீண்ட கால மனித உரிமை கரிசனைகளுக்கு தீர்வு காண்பதாக உறுதியளித்தார்.
எனினும் முன்னைய இலங்கை அரசாங்கங்கள் போல 1983 முதல் 2009 வரையான காலப் பகுதியில் உள்நாட்டு யுத்தத்தின்போது இடம்பெற்ற பாரிய மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்பு கூறப்பட வேண்டும் என்பதை அவர் ஆதரிக்கவில்லை.
திஸாநாயக்க அதிகளவு சமத்துவமான பொருளாதாரக் கொள்கைகளை முன்வைத்தார்.
ஊழலுக்கு எதிராக போராடுவது பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ஒழிப்பது உட்பட நீண்ட கால மனித உரிமை கரிசனைகளுக்கு தீர்வு காண்பதாக உறுதியளித்தார்.
எனினும் முன்னைய இலங்கை அரசாங்கங்கள் போல 1983 முதல் 2009 வரையான காலப்பகுதியில் உள்நாட்டு யுத்தத்தின்போது இடம்பெற்ற பாரிய மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக் கூறப்பட்ட வேண்டும் என்பதை அவர் ஆதரிக்கவில்லை - என்று கூறியுள்ளது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
