யாழில் அரச சார்பற்ற நிறுவனங்களால் 983 மில்லியன் ரூபாய் திட்டங்கள்.-- யாழ். மாவட்ட பதில் அரச அதிபர் ம.பிரதீபன் தெரிவிப்பு

யாழில் அரச சார்பற்ற நிறுவனங்களால் 983 மில்லியன் ரூபாய் பெறுமதியான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் ம.பிரதீபன் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு அரச சார்பற்ற நிறுவனங்களால் 983 மில்லியன் ரூபாய் பெறுமதியான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் ம.பிரதீபன் தெரிவித்தார்.
அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு இடையிலான மாவட்ட ஒருங்கிணைப்பு கலந்துரையாடல் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) க. சிறீமோகனன் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
இதில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"2024 ஆம் ஆண்டில் அரச சார்பற்ற நிறுவனங்களால் 983 மில்லியன் ரூபாய் பெறுமதியான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன.
இதேவேளை, 2025ஆம் ஆண்டு இதுவரை யாழ்ப்பாண மாவட்டத்தில் அரச சார்பற்ற நிறுவனங்களால் நடைமுறைப்படுத்த 568 மில்லியன் ரூபா பெறுமதியான திட்டங்கள் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
குறை நிரப்பு வேலைகளில் அரச சார்பற்ற நிறுவனங்கள் ஈடுபட்டு வருவதாகவும், ஆனால் பிரதேச செயலகங்களுக்கு இடையில் ஒதுக்கீடுகளில் வேறுபாடுகள் காணப்படுவதனால் இந்தத் திட்டங்களை இரண்டு வாரங்களில் சம்பந்தப்பட்ட திணைக்களங்களையும் அழைத்து மீள ஆராய்ந்து இறுதித் தீர்மானம் எடுக்கலாம் எனவும் தெரிவித்தார்.
மேலும், அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு அமைய குறிப்பாக "கிளீன் சிறீலங்கா" திட்டத்துக்கு அமையவும் அரச சார்பற்ற நிறுவனங்களின் திட்டங்களையும் உள்வாங்கி "செழுமையான நாடு அழகான வாழ்க்கை" என்ற கொள்கைக்கு அமைய அனைவரும் வினைத்திறனாக செயல்படுவோம் எனத் தெரிவித்தார்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
