யாழில் பரவுவது எலிக் காய்ச்சல் சந்தேகிக்கப்படும் சூழலில் இன்று பருத்தித்துறையில் விசேட கலந்துரையாடல்

4 weeks ago



யாழ்ப்பாணக் குடாநாட்டில் பரவுவது எலிக் காய்ச்சலாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் சூழலில் அக்காய்ச்சல் காரணமாக இதுவரை 6 பேர் உயிரிழந்தமையோடு பலர் பாதிக்கப்பட்டமை தொடர்பில் ஆராய இன்று பருத்தித்துறையில் விசேட கலந்துரையாடலுக்கு  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எலிக் காய்ச்சலாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் மர்மக் காய்ச்சலின் காரணமாக பலர் உயிரிழந்த நிலையில் தற்போது மாவட்டத்தில் மேலும் 40 வரையானோர் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இதன் காரணமாக நோய் அறிகுறி காணப்பட்டவர்களின் மாதிரிகள் பகுப்பாய்விற்காக அனுப்பி வைக்கப் பட்டுள்ளன.

ஆயினும் குடாநாட்டில் பரவும் காய்ச்சலின் வகை இதுவரை உறுதி செய்யப்படவில்லை.

இனம் காணப்படாத காய்ச்சலை எதிர்கொள்வது தொடர்பிலேயே இன்று மாவட்ட சுகாதாரப் பணிப்பாளரின் ஏற்பாட்டில் விசேட கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அண்மைய பதிவுகள்