ஜனாதிபதித் தேர்தல் கட மைகளில் 54 ஆயிரம் பொலிஸார் ஈடுபடுத்தப்படவுள்ளனர் என்று பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.

4 months ago


ஜனாதிபதித் தேர்தல் கடமைகளில் 54 ஆயிரம் பொலிஸார் ஈடுபடுத்தப்படவுள்ளனர் என்று பொலிஸ் திணைக்களம் அறி வித்துள்ளது.

வாக்கெடுப்பு நிலையங்கள், வாக்கு எண்ணும் நிலையங்களை நிர்வகித்தல், வாக்குப்பெட்டிகள் கொண்டு செல்லப்படுவதைக் கண்காணித்தல், ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் அவற்றைத் தீர்ப்பது, அசம்பா விதங்கள் இன்றி தேர்தல் நடை பெறுவதை உறுதிசெய்தல் போன்ற பணிகளுக்காக நாடு முழுவதும் பொலிஸார் கடமையில் ஈடுப்படுத்தப்படவுள்ளார்கள்.

நாடு முழுவதிலும் உள்ள 13 ஆயிரம் வாக்கெடுப்பு நிலையங்களிலும், 45 வாக்கு எண்ணும் நிலையங்களிலும் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படுவர் என்று சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அசங்க கரவிட்ட தெரிவித்துள்ளார்.

மேலும், தேர்தல் காலத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் பொலிஸார் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட 3 ஆயிரத்து 200 வாகனங்கள் பயன்படுத்தப்படவுள்ளன.

தேர்தல்கள் சட்ட மீறல்களை தடுக்க பொலிஸார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டிருந்த பதாகைகள் மற்றும் கட்அவுட்டுகளை நீக்குவதற்காக 1,500 தொழிலா ளர்கள் இணைத்துக் கொள்ளப் பட்டுள்ளனர் என்றும் தெரிவிக் கப்பட்டது.

இதுவரை ஒரு இலட்சத்து 69 ஆயிரத்து 358 சட்டவிரோத சுவரொட்டிகள், பதாகைகள் மற்றும் கட்அவுட்டுகள் அகற்றப்பட்டுள்ளன.

நாடு முழுவதிலும் உள்ள 607 பொலிஸ் நிலையங்களில் தேர்தல் கடமைகளுக்காகவும் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளை விசாரிப்பதற்காகவும் தலா மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், ஜனாதிபதி வேட் பாளர்களின் பாதுகாப்புக்காக 260இற்கும் மேற்பட்ட பொலிஸார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

250இற்கும் மேற்பட்ட தேர்தல் பேரணிகள் மற்றும் வாக்குச் சீட்டுகள் அச்சிடப்படும் நிலையங்களில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றும் கூறப்பட்டது.