இலங்கைக் கடற்படையினரின் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த மேலும் இரண்டு இந்திய மீனவர்கள் வைத்தியசாலையில் இன்று சேர்ப்பு

2 months ago


இலங்கைக் கடற்படையினரின் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த மேலும் இரண்டு இந்திய மீனவர்கள் வைத்தியசாலையில் இன்று சேர்க்கப்பட்டுள்ளனர்.

இலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டியபோது நேற்று அதிகாலை 13 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

இதன்போது இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் காயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டபோதும் எஞ்சிய 11 மீனவர்களும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட 11 இந்திய மீனவர்களும் காங்கேசன்துறை பொலிஸாரினால் மல்லாகம் நீதிவான் முன் முன்னிலை செய்யப்பட்டு எதிர்வரும் 10 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

அவர்களில் இருவரில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் காணப்படுகின்றன என்று கூறி இன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அண்மைய பதிவுகள்