இலங்கை அரசியல்வாதிகளின் உறவினர்கள் பலர் வெளிநாட்டு தூதரகங்களில் பல்வேறு பதவி நிலைகளில் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

3 months ago


இலங்கை வெளிநாட்டு சேவை அதிகாரிகள் அல்லாத அரசியல் தொடர்புகளின் அடிப்படையில் அரசியல்வாதிகளின் உறவினர்கள் பலர் வெளிநாட்டு தூதரகங்களில் பல்வேறு பதவி நிலைகளில் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அந்த அடிப்படையில்                      அமெரிக்காவின் வொஷிங்டனில் இலங்கைத் தூதுவராக முன்னாள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க செயற்படுவதோடு தூதரகத்தின் மூன்றாவது அதிகாரி தாரக திஸாநாயக்க ஆவார்.

தாரக, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸா நாயக்கவின் மகனாவார். அங்கு எழுத்தாளராக கடமையாற்றுபவர் முன்னாள் அமைச்சர் சுசில் பிரேமஜயந்தின் மகள் இந்திவரி குலரத்ன.

இதற்கு முன்னர் மேற்குறிப்பிட்ட தூதரகத்தில் முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தனவின் மகன் விபுல கடமையாற்றியுள்ளார்.

அதே தூதரகத்தின் ஊடக அதிகாரி அசோக ஜயதுங்க முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்கவின் செய்தி தொடர்பாளராக கடமையாற்றியவர்.

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் கொன்சியூலர் ஜெனரலாக கடமையாற்றுபவர் டாக்டர் லலித் சந்திரதாஸ. இவர் முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகி யோரின் மைத்துனர் ஆவார்.

அவுஸ்திரேலியாவின் கான் பராவின் தூதுவர் சித்ராங்கனி வாகீஸ்வர ஜனாதிபதி அலுவல கத்தில் சேவையாற்றி ஓய்வு பெற் றவராவார்.

அந்த அலுவலகத்தில் மூன்றாவது அதிகாரியாகப் பணிபுரிபவர் டி.சி.பெர்னாண்டோபுள்ளே.     முன்னாள் அமைச்சர் அருந்திக பெர்னாண்டோவின் மனைவியாவார்.

மெல்பேரன் கொன்சியூலர் ஜெனரல் சந்தித் சமரசிங்க. இவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்.

ஜப்பான் ரோக்கியோவில் இலங்கை தூதுவர் ரொட்னி பெரேரா. இவர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு நெருக்கமான ரொனால்ட் பெரேராவின் சகோதரர் ஆவார்.

2006ஆம் ஆண்டு முதல் இதே அலுவலகத்தில் எழுத்தாளராக கடமையாற்றி வரும் இந்து குணரத்ன, முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் உறவுக்கார மகளாவார்.

இங்கிலாந்து தூதுவர் ரோஹித போகல்லாகம முன்னாள் அரசியல்வாதி ஆவார்.

இங்கு மூன்றாவது அதிகாரியான சேனிய புஞ்சி நிலமே முன்னாள் அமைச்சர் சுசந்த புஞ்சி நிலமேயின் மகன்.

இதற்கு முன்னர், முன்னாள் இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்தவின் மகன் கசுந்த சில்வா மூன்றாவது அதிகாரியாக பணி யாற்றியுள்ளார்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகனான சஹஸ்ர பண்டார. பாரிஸில் உள்ள பிரான்ஸ் தூதரகத்தில் மூன்றாவது அதிகாரியாவார்.

அதற்கு முன்னர் அந்த பதவியில் முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவின் இளைய சகோதரரான அமில திஸாநாயக்க பணியாற்றியிருந்தார்.

அத்தோடு சீஷெல்ஸ்                         விக்டோரியாவின் தூதுவர்           முன்னாள் ஜனாதிபதி மகிந்த     ராஜபக்ஷவின் மைத்துனர் ஸ்ரீமால் விக்கிரமசிங்க ஆவார். இவர் ஷிரந்தி ராஜபக்ஷவின் சகோதரர் ஆவார்.

பலஸ்தீனத்தில் இலங்கைக்கான பிரதிநிதியாக முன்னாள் பிரதி அமைச்சர் நாவலகே பேர்னாட் குரே பதவி வகிக்கிறார்.

மேற்குறிப்பிட்ட இந்த                          பட்டியலிலுள்ள நபர்கள் அல்லாத இன்னும் பலர் இவ்வாறு வெளி நாட்டு தூதரகங்களில் பல்வேறு பதவி நிலைகளில் பணிபுரிகின் றமை அண்மையில் வெளிவந் துள்ளன.



அண்மைய பதிவுகள்