மன்னார் பாலத்தடியில் அகற்றப்பட்ட இராணுவ சோதனைச் சாவடி மீண்டும் நிறுவப்பட்டது.

6 months ago


மன்னார் பிரதான பாலத்தடியில் சில வருடங்களாகக் காணப்பட்ட இராணு வச் சோதனைச் சாவடி கடந்த சில வாரங்களுக்கு முன் அகற்றப்பட்ட நிலையில் மீண்டும் புதிதாக அமைக்கப்பட்டுள்ளமை குறித்து மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு - அத்துருகிரிய பிரதேசத் தில், நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்த நிலையில் பலர் காயமடைந்துள்ளனர்.

எனினும், துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்கள் மன்னாரிற்குச் சென்று. தலை மன்னார் ஊடாக இந்தியாவுக்கு தப் பிச் செல்ல உள்ளனர் எனப் புலனாய்வுத் துறை அதிகாரிகளுக்கு இரகசியத் தகவல் கிடைத்துள்ளனவாம்.

அதற்கு அமைவாக அந்தச் சம்பவத் துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் மன்னாருக்கு சென்று இந்தியாவிற்கு கடல் மார்க்கமாக தப்பிச் செல்ல சந்தர்ப்பங்கள் உள்ளன.

அதன் அடிப்படையில் மன்னாருக் குச் செல்லும் பிரதான பாலத்தடியில் விசேட இராணுவ சோதனைச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

அதற்கு அமைவாக வேறு மாவட் டங்களில் இருந்து மன்னாரிற்குள் நுழைகின்ற சந்தேகத்திற்கு இடமான வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.