பொங்கல் விழா மட்டக்களப்பு மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தினால் இன்று (26) நடைபெற்றது
தமிழர் பண்பாட்டுப் பாரம்பரிய கலாசார அம்சங்களை மங்கி மறையாமல் பிரதிபலிக்கும் பொங்கல் விழா மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தினால் இன்று (26) குருக்கள்மடம் ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம சுவாமி ஆலயத்தில் மிகவு விமர்சையாக நடைபெற்றது.
செட்டிபாளையம் கட்டுப்பிள்ளையார் ஆலயத்திலிருந்து சம்பிரதாய முறைப்படி கதிர் எடுக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
பின்னர் நெற்கதிர்கள், செட்டிபாளையம் ஊடாக பண்பாட்டுப் பவனி ஊர்வலமாக செல்லப்பட்டு குருக்கள்மடம் ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம சுவாமி ஆலயத்தைச் சென்றடைந்தது.
அங்கு கொண்டு சென்ற நெற்கதிர்கள் அடிக்கப்பட்டு புத்தரிசி குற்றி புதுப்பானையில் இட்டு பொங்கல் வழிபாடுகள் நடைபெற்றன.
குருக்கள்மடம், குருக்கள்மடம் கிராம பொதுமக்கள் மற்றும் பொது அமைப்புக்களுடன் இணைந்து மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் திருமதி.சிவப்பிரியா வில்வரத்னம் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது தமிழ் தாய் வாழ்த்து, இசைவாத்திய ஆற்றுகை, கிரமிய நடனம், நாட்டார் நடனம், உழவர் நடனம், ஒயிலாட்டம், நாட்டார் பாடல், கவியரங்கம், என்பன ஆற்றுகை செய்யப்பட்டதோடு, கிராமிய விளையாட்டுக்களும் இடம்பெற்று நிகழ்ச்சிகளில் பற்கேற்றவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்வுகளும் இடம்பெற்றன.
பிரதேச செயலக உத்தியோகஸ்த்தர்கள், பொதுமக்கள், கலைஞர்கள், உள்ளிட்ட பலரும் பற்கேற்றிருந்தனர்.