கனடாவில் இரு யுவதிகள் படுகொலை தகவலுக்கு ஒரு லட்சம் டொலர்

6 months ago



கனடாவில் இரண்டு யுவதிகள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்துத் தகவல் வழங்குவோருக்கு சன்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவின் பீல் பிராந்திய பொலி ஸார் இவ்வாறு சன்மானம் வழங்கு வார்கள் என அறிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பிலான தகவல்களை வழங்கும் நபர்களுக்கு ஒரு லட்சம் டொலர் சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

24 வயதான ஜெக்லின் கோர் மற் றும் 19 ரெனிலியா ரிச்சர்ட்ஸ் ஆகிய இரண்டு யுவதிகள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

மோதல்களின்போது தவறுதலாக மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் இவ்வாறு இரண்டு யுவதிகளும் கொல்லப்பட்டிருந்தனர்.

இந்தக் கொலைகளுடன் தொடர் புடைய விசாரணைகளில் ஒத்துழைப்பு வழங்குவோருக்கு சன்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.