ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் தெரிவு இறுதி முடிவு புதன் அல்லது வியாழன் அறிவிக்கப்படும்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக போட்டியிட தெரிவு செய்யப்பட்ட இரு வேட்பாளர்களில் இறுதியாக ஒருவரின் பெயரை தெரிவு செய்வதில் நேற்று நீண்ட விவாதங்கள் இடம்பெற்ற நிலையில் எதிர்வரும் புதன்கிழமை அல்லது வியாழக்கிழமை பொதுவேட்பாளர் தொடர்பான இறுதி முடிவு அறிவிக்கப்படும் என தமிழ் மக்கள் பொதுச்சபையின் பிரதிநிதிகள் அறிவித்தனர்.
யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலுக்கு பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் நேற்று கூடிய தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பு தமிழ் பொது வேட்பாளரை இறுதி செய்யும் கலந்துரையாடல்களில் ஈடுபட்டது.
தமிழ் பொது வேட்பாளராகக் களமிறக்குவதற்குப் பரிந்துரைக்கப்பட்டவர்களில் இருந்து ஒருவரைத் தெரிவு செய்வதற்காக பல மணிநேரமாக தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பு ஆலோசனை நடத்தியபோதும், பொதுவேட்பாளரை இறுதி செய்ய முடியவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், தமிழ் பொதுவேட்பாளர் யார் என்பது இறுதி செய்யப்பட்டு இன்னும் இரண்டொரு தினங்களில் அறிவிக்கப்படும் என்று இன்று மாலை தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பு உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
