இவ்வருடத்தில் 966,604 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை - இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது

6 months ago

இவ்வருடத்தின் இதுவரையான காலப் பகுதிக்குள் 966,604 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

ஜூன் மாதத்தில் இதுவரையான காலப் பகுதிக்குள் 69,825 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

அதன்படி, இவ்வருடத்தின் ஜனவரி மாதத்தில் 208,253 சுற்றுலாப் பயணிகளும், பெப்ரவரி மாதத்தில் 218,350 சுற்றுலாப் பயணிகளும், மார்ச் மாதத்தில் 209,181 சுற்றுலாப் பயணிகளும், ஏப்ரல் மாதத்தில் 148,867 சுற்றுலாப் பயணிகளும், மே மாதத்தில் 112,128 சுற்றுலாப் பயணிகளும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

அதிகளவான சுற்றுலாப் பயணிகள் ரஷ்யா, இந்தியா, ஜேர்மனி, பிரித்தானியா, சீனா, பிரான்ஸ் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளிலிருந்து வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.


அண்மைய பதிவுகள்