ஆலயங்களில் இருந்து படையினரை விலக்கிக் கொள்ள அரசு தீர்மானித்ததாக வெளியான தகவலை பாதுகாப்பு அமைச்சு நிராகரிப்பு
5 months ago

ஆலயங்கள், மத வழிபாட்டுத் தலங்கள் அமைந்துள்ள பகுதிகளில் இருந்து படையினரை விலக்கிக் கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வெளியாகும் தகவல்களை பாதுகாப்பு அமைச்சு நிராகரித்துள்ளது.
ஆலயங்கள், வழிபாட்டுத் தலங்களின் பாதுகாப்புக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ள படையினரை விலக்கிக் கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் தவறானவை என்று அது குறிப்பிட்டுள்ளது.
அவ்வாறான தீர்மானங்கள் எவற்றையும் எடுக்கவில்லை. இந்த தகவல்கள் முற்றிலும் தவறானவை என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
