யாழ்.கரவெட்டியில் நுளம்புக்கு புகை மூட்டிய சமயம் ஆடையில் தீப்பிடித்து உடல் கருகி மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார்.
3 months ago

நுளம்புக்கு புகை மூட்டிய சமயம் ஆடையில் தீப்பிடித்து உடல் கருகி மூதாட்டி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் கரவெட்டி மேற்கு - கவுடாலைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த சண்முகம் பொன்னம்மா (வயது 81) என்ற முதியவரே உயிரிழந்துள்ளார்.
தனிமையில் வசித்து வந்த அவர் நுளம்புக்கு தீ மூட்டிய போது அவரது ஆடையில் தீ பற்றியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மரணம் தொடர்பில் கரவெட்டி திடீர் மரண விசாரணை அதிகாரி வே.பாஸ்கரன் விசாரணைகளை மேற்கொண்டார்.
இது தொடர்பாக நெல்லியடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
