ஐக்கிய மக்கள் சக்தி / ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் பரப்புரை நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணத்தில் தங்கியிருக்கும் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் நேற்று வெள்ளிக் கிழமை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் மருத்துவர் ப. சத்தியலிங்கத்தை வவுனியாவில் சந்தித்து உரை யாடினார்.
ஜனாதிபதித் தேர்தல் மற்றும் அரச மைப்பு விவகாரம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டன.