ஈழத் தமிழின விடுதலைப்போராட்டத்தின் முன்னோடியும், முதற் தற்கொடையாளருமான தியாகி பொன். சிவகுமாரனின் 50ஆவது ஆண்டுநினைவேந்தல் நிகழ்வு நாளை(05) புதன்கிழமை காலை 9 மணியளவில் உரும்பிராய்ச்சந்திக்கு அருகில் அமைந்துள்ள பொன். சிவகுமாரனின் நினைவிடத்தில் தியாகி பொன். சிவகுமாரன் நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் கடைப்பிடிக்கப்படவுள்ளது.
பொன்.சிவகுமாரனின் சகோதரி சிவகுமாரி ஈகச்சுடரேற்றி நினைவேந்தல் நிகழ்வை ஆரம்பித்து வைப்பார்.
அதனைத்தொடர்ந்து அஞ்சலி நிகழ்வுகளும், நினைவஞ்சலிக் கூட்டமும் இடம்பெறும்.
நிகழ்வில் உரும்பிராயைச் சேர்ந்த பொருளாதார நலிவுற்ற குடும்பங்களைச் சேர்ந்த 50 பேருக்குப் புத்தாடைகள் வழங்கி வைக்கப்படவுள்ளன.
அத்துடன் சிவகுமாரனின் உருவச்சிலைக்கு முன்பாகத் தாகசாந்தி நிலையம் அமைக்கப் பட்டு மக்களின் தாகம் தீர்க்கும் பணியும் முன்னெடுக்கப்படவுள்ளது.
இதேவேளை, தியாகி பொன். சிவகுமாரனின் 50 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் அனைத்துத் தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள், உறுப்பினர்கள், யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் கலந்துகொண்டு அஞ்சலிக்குமாறு தியாகி பொன்.சிவகுமாரன் நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.