அமெரிக்காவில் வானொலி கோபுரத்தின் மீது ஹெலிகொப்டர் மோதியலில் குழந்தை உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர்.


அமெரிக்காவில் வானொலி கோபுரத்தின் மீது ஹெலிகொப்டர் மோதியலில் குழந்தை உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் அமெரிக்கா டெக்சாஸ் மாகாணத்தின் மிகப்பெரிய நகரமான ஹூஸ்டனில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.
வானொலி கோபுரத்தின் மீது ஹெலிகொப்டர் மோதிய வேகத்தில் வெடித்துச் சிதறியதோடு தீப்பற்றியுள்ளது.
இந்த விபத்தில் ஒரு குழந்தை உட்பட 4 பேர் பலியானதாக ஹூஸ்டன் மேயர் ஜோன் விட்மயர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
இன்றிரவு இது ஒரு சோகமான நிகழ்வு. இது ஒரு சோகமான உயிரிழப்பு ஆகும். இருப்பினும் குடியிருப்பாளர்கள் பாதுகாப்பாக உள்ளனர்.
விபத்துக்குள்ளான ஹெலிகொப்டர் எலிங்டன் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.
விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருவதால், பாதிக்கப்பட்டவரின் அடையாளம் உடனடியாக வெளியிடப்படவில்லை.
தற்போது வானொலி கோபுரத்தின் மீது ஹெலிகொப்டர் மோதும் விடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
