வவுனியா - கள்ளிக்குளம் பகுதியில் 8 வயது சிறுவன் ஒருவர் கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

1 month ago



வவுனியா - கள்ளிக்குளம் பகுதியில் 8 வயது சிறுவன் ஒருவர் கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்றயதினம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,

நேற்றையதினம் குறித்த சிறுவன் கிணற்றுப் பகுதிக்கு சென்று தண்ணீர் அள்ளியுள்ளார். இதன்போது தவறி உள்ளே விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உறவினர்களால் சிறுவன் மீட்கப்பட்ட போது அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் கள்ளிக்குளம் பகுதியைச் சேர்ந்த க.டிலக்சன் என்ற 8 வயதான சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக ஓமந்தை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.