யாழ்.வடமராட்சி துன்னாலையில் மூன்று நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட பெண் ணொருவர் உயிரிழந்தார்.

2 months ago



யாழ்.வடமராட்சி - துன்னாலை கிழக்கு, குடத்தனையைச் சேர்ந்த 68 வயதுடைய 6 பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து மேலும் அறிய வருவதாவது, குறித்த பெண் கடந்த 3 ஆம் திகதி காய்ச்சலால் பீடிக்கப்பட்டார்.

4ஆம் திகதி மந்திகை              மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், அன்றிரவே மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

எனினும், அவர் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரின் மரணம் தொடர்பில் திடீர் மரண விசாரணை அதிகாரி            நமசிவாயம் பிறேம்குமார்            மேற்கொண்டார்.

அவரின் மரணம் தொடர்பில் திடீர் மரண விசாரணை அதிகாரி            நமசிவாயம் பிறேம்குமார்              மேற்கொண்டார்.



அண்மைய பதிவுகள்