எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் ஒருவரைக் களமிறக்குவதற்குத் தீர்மானித்துள்ளமையை வரவேற்பதாகவும், இதன்மூலம் தமிழ் மக்கள் தமது அரசியல் அபிலாஷைக ளையும், கோரிக்கைகளையும் ஜன நாயக முறையில் உலகறியச் செய்வதுடன் சர்வதேசமயப்படுத்த முடியும் என நம்புவதாகவும் 5 புலம்பெயர் தமிழர் அமைப்புகள் கூட்டாகத் தெரிவித் துள்ளன.
தமிழ்ப் பொதுவேட்பாளர் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகவுள்ள நிலையில், இதுகுறித்து தமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தி உலகத் தமிழ் அமைப்புகளின் பேரவை, வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை, இலங்கைத் தமிழ்ச்சங்கம், ஒருங்கிணைந்த தமிழ் அமெரிக்கர்கள் அரசியல் நடவடிக்கைக் குழு மற்றும் உலகத்தமிழ் அமைப்பு ஆகிய 5 புலம் பெயர் தமிழர் அமைப்புகள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளன.