கனடாவில் தேசிய பழங்குடி மக்கள் தினம் கொண்டாட்டம்

6 months ago

தேசிய பழங்குடி மக்கள் தினம் என்பது கனடாவின் முதற்குடி மக்கள் இல்யூட் மற்றும் மெடிஸ் பழங்குடியின மக்கள் ஆகியோரின் கலாச்சாரங்கள் மற்றும் அவர்களின் பங்களிப்புகளை அங்கிகரித்து கொண்டாடும் ஒரு நாளாக யூன் மாதம் 21 ஆம் திகதி இருக்கின்றது.

கண்டாவில் கவர்னர் ஜெனரல் ரோமியோ லெப் லாங் அவர்களால் பிரகடனப்படுத்தப்பட்ட பின்னர் 1996ஆம் ஆண்டில் இருந்து இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

கனடிய பழங்குடி மக்கள் பாரம்பரியமாக தங்கள் கலாச்சார பாரம்பரியத்தை கொண்டாடும் என்பது உட்பட பல காரணங்களுக்காக இந்த திகதி ரீதியான விடுமுறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த நாள் 2001 ஆம் ஆண்டு முதல் வடமேற்குப் பிரதேசங்களில் ஒரு சட்டப்பூர்வ பிராந்திய விடுமுறையாகயும், 2017 ஆம் ஆண்டு முதல் பூகோன் பகுதியில் இருந்தும் கொண்டாடப்படுகிறது.

கனடிய பிரதம மந்திரி ஜஸ்டின் ட்ரூடோ இந்த நிகழ்வை தேசிய பழங்குடி மக்கள் தினம் என்று மறு பெயரிடுவதாக உறுதியளித்திருந்தார்.

ஏனைய பகுதிகளுக்குச் சட்டரீதியான விடுமுறை கொடுக்கப்படவில்லை

இந்த நாள் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களுக்கு மிகவும் முக்கியமானது.

இலங்கையில் சிறுபான்மை இனத்தவரான ஈழத்தமிழர்கள் யுத்தம் என்ற போர்வையில் சொந்த நிலங்களைவிட்டு விரட்டியடிக்கப்பட்ட போது, கனடிய பழங்குடி மக்கள்தான் அவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டித் தங்கள் நிலத்தில் எங்களைக் குடியிருக்க வைத்தார்கள்.

இன்று கனடியத் தமிழர்கள் அரசியல் பொருளாதாரத் துறைகளில் சிறந்து விளங்குவதற் காரணம் அன்று அவர்கள் பெருந்தன்மையோடு எங்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டி வரவேற்றதேயாகும்.

கனடாவின் ஆரம்ப சரித்திரத்தை அறிய வேண்டுமானால் இன்று சிறுபான்மையினராகி விட்ட முதற்குடி மக்களின் வரலாற்றை அறிந்து கொள்வது சிறப்பாகும். 

கனடாவின் முதல் குடிமக்கள் வாழ்ந்த நிலப்பகுதிகளின் அடிப்படையில், அவர்களைச் சட்டரீதியாக அடையாளம் காணபதற்காக அவர்களை ஆறு பிரிவாகப் பிரித்தார்கள்.

அவையாவன, சமவெளி குடிகள்-(Plains) இறொக்குவா குடிகள் - (Iroquoian Nations) வட வேட்டுவக் குடிகள்-(Northern Hunters) வட மேற்கு குடிகள் -(Northwest Cost) அல்கோன்கியன் குடிகள் - (Algonkian Nations) பீடபூமிக் குடிகள் (Plateau)

இதை விட இனுவிட் என்ற பழங்குடிகள் கனடாவின் மேற்பகுதிகளில் வாழ்ந்தவர்களாவர்.

தொடக்க காலத்தில் வடதுருவ பனிப்பகுதியில் வாழ்ந்த இவர்களைச் சிலர் எஸ்கிமோக்கள் என்றும் அழைத்தார்கள். 

1604 ஆம் ஆண்டு பிரெஞ்சு நாட்டவரும், அதைத் தொடர்ந்து 1607 ஆம் ஆண்டு ஆங்கிலேயரும் அதன் பின் ஏனைய ஐரோப்பிய இனத்தவர்களும் காலப்போக்கில் கனடாவிற்கு வந்து குடியேறினார்கள்.

கனடாவில் 1.7 மில்லியன் முதற்குடி மக்கள் வாழ்கிறார்கள்.

இவர்கள் கனடா குடிமக்கள் தொகையில் சுமார் 3 வீதமானவர்கள்.

1863 ஆம் ஆண்டிலிருந்து சுமார் ஒன்றரை லட்சம் பிள்ளைகள் வரை முதற்குடியினரின் பெற்றோரிடம் இருந்து பிரிக்கப்பட்டுக் கத்தோலிக்க மதத்திற்கு மதம் மாற்றப்பட்டது மட்டுமல்ல, அவர்களது மொழியைப் பேசுவதும் மறுக்கப்பட்டு ஆங்கிலம் புகுத்தப்பட்டது.

கட்டுப்பாட்டுக்குள் அடங்க மறுத்த பிள்ளைகள் காணாமல் ஆக்கப்பட்டார்கள்.

சில பிள்ளைகள் வீட்டு வேலைகள் செய்வதற்காகத் தத்தெடுக்கப்பட்டார்கள்.

இதனால் உயிரோடு இருந்த பெற்றோரையே பார்க்க முடியாத சூழ்நிலையில் முதற்குடி மக்களின் பிள்ளைகள் வளர்ந்தார்கள்.

இன்று அவர்களில் சிலர் படித்து நல்ல நிலையில் இருக்கின்றார்கள்.

அண்மைய பதிவுகள்