உலக சதுரங்க சாம்பியன் குகேஷுக்கு தமிழக அரசால் 5 கோடி ரூபா பரிசு

3 weeks ago



உலக சதுரங்க சாம்பியன் குகேஷுக்கு தமிழக அரசால் 5 கோடி ரூபா பரிசு.

உலக சதுரங்க சாம்பியன்ஷிப் தொடரில் தமிழக வீரர் குகேஷ், நடப்பு சாம்பியன் டிங் லிரெனை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

இதன் மூலம் 18 வயதிலேயே உலக சதுரங்க சாம்பியனாகி குகேஷ் வரலாறு படைத்துள்ளார்.

14 ஆவது சுற்றில் அற்புதமாக விளையாடிய குகேஷ் 58 ஆவது நகர்த்தலில் நடப்பு சாம்பியன் டிங் லிரெனை வீழ்த்தினார்.

இதன் மூலம் விஸ்வநாதன் ஆனந்த்துக்குப் பிறகு உலக சதுரங்க சாம்பியன்ஷிப் பட்டம் வெல்லும் இராண்டவது தமிழக வீரர் என்ற பெருமையை குகேஷ் பெற்றுள்ளார்.

இந்நிலையில், உலக சதுரங்க சாம்பியன் குகேஷ்க்கு 5 கோடி ரூபா பரிசுத் தொகையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அண்மைய பதிவுகள்