சொந்தக் காசில் 'ஜெட்' வாங்குவேன் பியூமி தெரிவிப்பு

6 months ago

தனியார் ஜெட் ஒன்றை கொள்வனவு செய்யத் திட்டமிட்டுள்ளதாக பிரபல மொடல் அழகி பியூமி ஹன்சமாலி தெரிவித்துள்ளார். சட்டவிரோத சொத்துக் குவிப்பு விசாரணைப் பிரிவில் முன்னிலையாகி, அங்கிருந்து வெளியேறிச் சென்றபோது அவர் இதனை ஊடகங்களிடம் கூறியுள்ளார்.

அழகுசாதனப் பொருள்களை விற்பனை செய்து தாம் வருமானம் ஈட்டியதாகவும் வேறு எந்தவொரு வியாபாரமும் எமக்குக் கிடையாது எனவும் பியூமி தெரிவித்துள்ளார்.