யாழ்.மாவட்டம் முழுவதும் விவசாய இராசயன கட்டுப்பாட்டுப் பிரிவினர் அதிரடிச் சோதனை நடத்தியுள்ளனர்.

4 months ago


யாழ்.மாவட்டத்தில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட விவசாய இரசாயனங்கள். களை நாசினிகள். பூச்சி நாசினிகளின் விற்பனை அதிகரித்துள்ள நிலையில், மாவட்டம் முழுவதும் விவசாய இராசயன கட்டுப்பாட்டுப் பிரிவினர் அதிரடிச் சோதனை நடத்தி யுள்ளனர்.

வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட ஆபத்தான இரசாயனங்கள் அடங்கிய களை நாசினிகள் விற்பனை செய்யப்படு கின்றன எனக் கிடைக்கப் பெற்ற தக வலின் அடிப்படையில் இந்தச் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

இந்தச் சோதனை நடவடிக்கைக ளின்போது ஆவரங்கால் பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்று சோதனைக்குட்படுத்தப்பட்டு அங்கிருந்து சுமார் 4 மில்லியன் ரூபா பெறுமதியான சட்டவிரோத களை நாசினிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

அந்த வர்த்தக நிலையத்திற்குச் சொந்தமான களஞ்சிய சாலையிலும் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. வர்த்தக நிலைய உரிமையாளர் மீது விவசாயத் திணைக்களத்தினால் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

சாவகச்சேரி பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றிலும் திடீர் சோதனை நடத்தப்பட்டுள்ளதுடன், அங்கும் சட்ட விரோதமான களை நாசினி வியாபாரம் இடம்பெற்றமை கண்டுபிடிக்கப்பட்டு வர்த்தக நிலைய உரிமையாளருக்கு எதிராக சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த வர்த்தக நிலைய உரிமை யாளருக்கு நேற்றைய தினம் ஒன்றரை லட்சம் ரூபா தண்டம் விதித்து சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வெளிநாட்டிலிருந்து - குறிப்பாக இந்தியாவிலிருந்து - களை நாசினிகள் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டு யாழில் விற்பனை செய்யப்படுகின்றது. எனக் கூறப்பசுகின்றது.

இதனால் பொதுமக்களுக்கு மட்டு மல்லாமல் மண் வளமும் உடனடியாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே விவசாயிகள் இவ்வாறான சட்டவிரோத களை நாசினிகள் தொடர்பாக அவ தானமாக இருக்கவேண்டும் எனவும், சட்டவிரோதமான களை நாசினி வியாபாரம் தொடர்பாக தகவல் அறிந்தால் விவசாய திணைக்களத்திற்கு தகவல் வழங்கவேண்டும் எனவும் மாவட்ட விவசாய திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் அஞ்சனா ஸ்ரீரங்கன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் சட்டவிரோத களை நாசினி வியாபாரத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை தொடரும் எனவும். மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனைகள் நடத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

அண்மைய பதிவுகள்