உலகப் புகழ்பெற்ற வோக் பத்திரிகை, உலகின் குளிர்கால சுற்றுலா தளமாக இலங்கையின் தெற்கு கடற்கரையை பெயரிட்டுள்ளது.

3 hours ago



உலகப் புகழ்பெற்ற வோக் பத்திரிகை, உலகின் மிகச் சிறந்த குளிர்கால சுற்றுலா தளமாக இலங்கையின் தெற்கு கடற்கரையை பெயரிட்டுள்ளது.

கடலோரப் பகுதியின் இயற்கை அழகு மற்றும் கலாச்சார கூறுகளுக்கு மேலதிகமாக, சுற்றுலாப் பயணிகளுக்கு பல்வேறு அனுபவங்களை பெற்றுத்தர கூடிய வகையில் அமைந்துள்ளதாக அந்தப் பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.

அழகிய கடற்கரைகள், வனவிலங்குகள் மற்றும் தேயிலைத் தோட்டங்கள் போன்ற சுற்றுலா தலங்கள் காரணமாக, உலகெங்கிலும் உள்ள சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை இலங்கை ஈர்த்துள்ளதாக வோக் பத்திரிகை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.