யாழ்.பருத்தித்துறை ஹாட்லியின் மைந்தர்களின் 25 மற்றும் 20 ஆம் ஆண்டு நினைவில் இரத்ததான முகாம் நடைபெற்றது
யாழ்.பருத்தித்துறை ஹாட்லியின் மைந்தர்களின் 25 மற்றும் 20 ஆம் ஆண்டு நினைவை முன்னிட்டு ஹாட்லியின் மைந்தர்கள் நிதியத்தின் ஏற்பாட்டில், பருத்தித்துறை ஆதார மருத்துவமனை இரத்த வங்கி பிரிவினரின் அனுசரணையில் இரத்ததான முகாம் திங்கட்கிழமை நடைபெற்றது.
கல்விச் செயல்பாட்டின் நிமித்தம் வடமராட்சி இன்பர்சிட்டி கடற் பகுதியில் 1999 ஆம் ஆண்டு நவம்பர் 17 ஆம் திகதி, கடல்வள ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தவேளை கடல் அலையில் சிக்குண்டு உயிரிழந்த யாழ். ஹாட்லி கல்லூரியின் 2000 ஆம் ஆண்டு உயர்தர வகுப்பு மாணவர்கள் நான்கு பேரின் 25 ஆவது ஆண்டு நினைவும்,
பேராதனை பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீட மாணவனாக கல்வி கற்று வந்தவேளை புகையிரத விபத்தில் சிக்கி உயிரிழந்த மாணவனின் 20 ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டும் ஹாட்லிக் கல்லூரியின் மண்டபத்தில் இந்த இரத்த முகாம் நடைபெற்றது.