உலகில் வேகமாக வளரும் துறைமுகமாக கொழும்பு!

5 months ago


கப்பல் துறையின் முன்னணி ஆராய்ச்சி வெளியீடான அல் பாலைனர் உலகின் வேகமாக வளரும் துறைமுகமாக கொழும்பு துறைமுகத்தை முதல் காலாண்டில் குறிப்பிட்டுள்ளதாக கப்பல் துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் கே.டி. எஸ். ருவன்சந்திர தெரிவித்துள்ளார்.

அத்துடன், 2024ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் கொழும்பு துறைமுகம் 50 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்டியுள்ளதாக சுட் டிக்காட்டிய அவர், கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு தொழிற்சங்க நடவ டிக்கைகள் அந்த முன்னேற்றத்தை எட்டுவதற்குத் தடையாக அமையவில்லை என்றும் கூறினார்.

இரண்டு வருட முன்னேற்றம் தொடர்பில் ஜனாதிபதி ஊடக மையத்தில் திங்கட்கிழமை நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் கூறினார்.

மேலும், 2024 ஆம் ஆண் டில் 23.6 வீதம் என்னும் வேக மான வளர்ச்சி வீதத்தைப் பதிவு செய்ததன் மூலம் கொழும்பு துறைமுகம் செயல்பாட்டு செயல்திறனில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது. பல்வேறு தொழிற்சங்க நட வடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போதே இந்த முன்னேற்றத்தை அடைந்தோம். ஆனால், அவை எமது பணிக்கு இடையூறாக அமையவில்லை.

2023ஆம் ஆண்டில் இலங்கை துறைமுக அதிகாரசபை 10 கோடி அமெரிக்க டொலர் இலாபத்தைப் பதிவுசெய்துள்ளதுடன் 2024ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மாத்திரம் 5 கோடி அமெரிக்க டொலர் இலாபம் ஈட்டியுள்ளது - என்றும் கூறினார்.



அண்மைய பதிவுகள்