முல்லைத்தீவு - துணுக்காய் பகுதியில் நேற்று முன்தினம் வாகனம் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார்.
கொல்லவிளாங்குளம் - வவுனிக்குளம் பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய சின்னத்துரை பாஸ்கரன் என்பவரே விபத்தில் உயிரிழந்தார்.
காரின் ரயர் வெடித்ததால், சாரதியால் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் வீதியை விட்டு வாகனம் விலகியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
இதேவேளை வாகனத்தில் பயணித்த மேலும் இருவர் காயமடைந்த நிலையில் சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மல்லாவி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.