நியூசிலாந்து விமான நிலையத்தில் கட்டிப்பிடிக்க கட்டுப்பாடு போடப்பட்டுள்ளமை பயணிகளிடையே விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
வெளிநாடுகளுக்கு செல்லும் உறவினர்களை கட்டிப்பிடித்து வழியனுப்பும் முறை உலகளவில் உள்ளது.
இந்நிலையில் நியூசிலாந்து விமானநிலைய அறிவிப்பு போஸ்டரில், நியூசிலாந்து விமான நிலையத்தில் கட்டிப்பிடிக்க கட்டுப்பாடு; மனிதாபிமானமற்ற செயல் என கருத்து! | Hugging Restrictions At The New Zealand Airport கட்டி தழுவ அதிகப்பட்சம் 3 நிமிடங்கள்
'கட்டி தழுவுவதற்கான நேரம்-அதிக பட்சம் 3 நிமிடங்கள் என்றும், நீண்டநேர பிரியாவிடைகளுக்கு கார் நிறுத்தத்தை பயன்படுத்தவும்' என அச்சிடப்பட்டுள்ளது.
இந்த வாசகம் பயணிகளிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் மனிதாபிமானமற்ற செயல் என கருத்து தெரிவித்து இதனை இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.
அதேவேளை காலதாமதம் உள்ளிட்ட பிரச்சனைகளை தவிர்க்கும் வகையில் பயணிகளின் நலன் கருதியே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய நிர்வாகத்தினர் விளக்கம் கொடுத்துள்ளனர்.