421 நாட்களாகியும் மீண்டும் அலைக்களிக்கப்படுகின்ற யாழ் சித்த மருத்துவ மாணவர்கள்.
எதிர்வரும் ஆகஸ்ட் 12ம் திகதி இரண்டாம் கட்டமாக ஆரம்பமாகும் ஆயுள்வேத உள்ளகப் பயிற்சிக்கு தம் அணியின் 61 மாணவர்களையும் உள்ளடக்குவதாக கடந்த மே 14ம் திகதி ஆயுள்வேத ஆணையாளர் ஜெனரல் தங்களிடம் தெரிவித்திருந்த போதிலும் எமது பெயர்ப் பட்டியல் இதுவரை வெளியிடப்படவில்லையென 34வது அணி மாணவர்கள் கவலை வெளியிட்டுள்ளார்கள்.
இரண்டாம் கட்ட உள்ளகப் பயிற்சிக்காக காத்துக்கொண்டிருந்த 109 மாணவர்களில் 48 மாணவர்களின் பெயர்ப் பட்டியலே இதுவரை வெளியிடப்பட்டுள்ளது. பெப்ரவரி இரண்டாம் வாரத்தில் உள்ளகப் பயிற்சியை ஆரம்பிக்கத் திட்டமிட்டிருந்த போதிலும் அமைச்சரவை அங்கீகாரம் இதுவரை கிடைக்காத காரணத்தினால் எதிர்வரும் மார்ச் மாத நடுப்பகுதியிற்கும் ஏப்ரல் 10ம் திகதியிற்குமிடையில் உள்ளகப் பயிற்சியை ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக ஆயுள்வேத ஆணையாளர் ஜெனரல், பிரதி ஆணையாளர், தேசிய சுதேச மருத்துவ நிறுவக பணிப்பாளர் ஆகியோர் எம்மிடம் கடந்த 2024.01.22 தெரிவித்தனர்.
ஜனவரி 6ம் திகதி, கௌரவ ஜனாதிபதி அவர்களை சந்தித்து பேசியிருந்தோம். உள்ளகப்பயிற்சி தொடர்பான அமைச்சரவை முடிவுக்காக காத்திருப்பதாக ஜனாதிபதி அவர்களின் அப்போதைய மேலதிக உதவிச் செயலாளர் எல். இளங்கோவன் அவர்களிடம் ஆயுள்வேத ஆணையாளரால் தெரிவிக்கப்பட்டது.
ஏப்ரலலில் 359 மாணவர்களில் 60 மாணவர்களிற்கு மாத்திரம் முறைசாரா முறையில் உள்ளகப் பயிற்சி ஆரம்பிக்கப்பட்டது.
சுகாதார அமைச்சரிடம் இதுகுறித்து கலந்துரையாடிய போது நிதிநிலைமை மோசமாக இருப்பதால் கட்டம் கட்டமாக உள்வாங்கப்படுவார்கள். ஜீலை இறுதிப் பகுதியில் தாம் உள்ளடக்கப்படுவீர்களென ரமேஷ் பதிரண எங்களிடம் குறிப்பிட்டிருந்தார்.
சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்திய கலாநிதி பி. ஜி. மஹிபால அவர்களும் நிதிநிலைமை கருத்திற் கொள்ளப்பட்டதால் 60 மாணவர்களிற்கு ஆரம்பிக்க நேர்ந்தது; தம்மையும் உள்ளடக்கி வெகுவிரைவில் உள்ளகப் பயிற்சியை ஆரம்பிக்க முடியுமென குறிப்பிட்டு ஆயுள்வேத ஆணையாளரின் கவனத்திற்குக் கொண்டு வந்தார்.
ஜன் 03ம் திகதி 204 மாணவர்களும் ஆகஸ்ட் 12ம் திகதி 153 மாணவர்களும் உள்ளகப் பயிற்சியை ஆரம்பிக்க திறைசேரியிலிருந்து ஆயுள்வேத